ETV Bharat / city

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு இந்த தேதிகளில் விண்ணப்பிக்கலாம்! - 10 special public exam

சென்னை:  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் வரும் மே 13, 14 ஆகிய தேதிகளில் விணப்பிக்காலம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுத்துறை
author img

By

Published : May 12, 2019, 8:57 PM IST

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”கடந்த மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் (ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்றவர்கள்), வரும் ஜூனில் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வில் பங்குகொள்ளலாம்.

தேர்வர்களின் நலன் கருதி சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வரும் மே 13, 14 ஆகிய தேதிகளில் நேரில் சென்று ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் அவர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

 10 ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு 
சென்னை, 
அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
 பத்தாம் வகுப்பு மார்ச் 2019  பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய
தனித்தேர்வர்கள் (ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்றவர்கள்),நடைபெறவுள்ள ஜூன் 2019 சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.  

 அந்த நாட்களில், ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களின் கோரிக்கையினை ஏற்று, தேர்வர்களின் நலன் கருதி  சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு  அளிக்கப்படுகிறது. 
 
 தனித்தேர்வர்கள்  ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக    ஒவ்வொரு கல்வி
மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ,அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு மே 13,  14 ஆகிய இருதினங்களில்நேரில்  சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
 தனியார் இணையதள மையங்கள் மூலம்   விண்ணப்பிக்க இயலாது.  

   தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும்.
 தனித்தேர்வர்களுக்கு, தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும்
தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என  அதில் கூறப்பட்டுள்ளது. 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.