சென்னை: பா. சிவந்தி ஆதித்தனாரின் 87ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு இன்று (செப்.24) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீதிமன்றம் வழிகாட்டுதல் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதுப்பற்றி கருத்துக் கூற முடியாது. இஸ்லாமிய மக்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. வன்முறையை யாரும் கையில் எடுக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சரியில்லாமல் இருக்கிறது. செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் குண்டு வெடிப்பு கலாச்சாரம் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக அரசு 356 அரசியலமைப்புச் சட்டத்தை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. அதிமுக மீது பொய் வழக்கு போடும் முனைப்பில் மட்டும்தான் திமுக அரசு செயல்படுகிறது. அதிமுக அப்போது இருந்தே இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ஏன் அரசாங்கம் கைது செய்யவில்லை.
தமிழ்நாட்டில் படித்த தலைவர்களை மக்கள் தேர்வு செய்யவில்லை என்று ஜே.பி.நட்டா பேசினாலும் அதேபோல் இங்கு இல்லை. காமராஜர் கூட திறமையாக ஆட்சியை வழி நடத்தி இருக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பின்னணி என்ன? - முழு விவரம்