ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமியை கேட்பதற்கு ஆள் இல்லை... தனக்குத்தானேமுடி சூட்டிக்கொண்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார்... - Sasikala

எடப்பாடி பழனிசாமி கேட்பதற்கு ஆள் இல்லை என்ற காரணத்தால் தனக்குத்தானே அதிமுகவின் பொது செயலாளராக முடி சூட்டிக்கொண்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 17, 2022, 5:02 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், பெரியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு, இன்று (செப்.17) தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் 'சமூக நீதி நாள்' உறுதி மொழி எடுத்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "மனிதனுக்கு சுதந்திரம் வேண்டும், எழுத்துரிமை வேண்டும் என்று சொன்னவர். பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும், எல்லா சாதியை சேர்ந்தவர்களும் கோயிலிலே அர்ச்சர்களாக வர வேண்டும் என்றவர் பெரியார்.

பெரியாரின் பிறந்த நாளான இன்று, இதற்கு நேர் எதிர்பட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள், ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே சட்டம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு மனித உரிமைகளை பறிக்கக்கூடிய சக்திகளின் மூத்த தலைவராக இருக்கும் ஒருவரின் பிறந்தநாள் இன்று. நல்லவைகளுக்காகப் பிறந்தவர் தந்தை பெரியார், கெட்ட காரியங்களுக்காக மக்களை மத ரீதியாகவும் சாதி ரீதியாகயாகவும் பிரிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய சுயநலவாதி ஒருத்தருக்கும் பிறந்த நாள் இன்று.

வாரிசு அரசியல் பற்றி எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கின்றார். இதைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதையே கிடையாது. எடப்பாடி பழனிசாமி வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கொண்டால், கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். எடப்பாடி பழனிசாமி மேஜையின்கீழ் தவழ்ந்து, காலில் விழுந்து பதவியைப் பெற்று விட்ட காரணத்தால் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற காரணத்தால் தனக்குத்தானே அதிமுகவின் தலைவர் என்ற பொறுப்பை முடி சூட்டிக்கொண்டு பிதற்றிக் கொண்டு இருக்கின்றார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கருணாநிதியின் மகன் ஸ்டாலின் ஆட்சி செய்கின்றார் எனில், அவர் சிறு வயது முதலே அரசியலில் ஈடுபட்டு இருக்கின்றார். 15, 16, வயது முதலே இயக்கத்தில் ஈடுபட்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக பாடுபட்டு, சிறைக்கு சென்று இருக்கின்றார். ஆகவே, கருணாநிதிக்குப் பிறகு அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது என்பது பொருத்தமான ஒன்று.

அதைப் பற்றி பொறாமைப்படுகின்ற அளவிற்கு பழனிசாமி பேசியிருக்கின்றார். இனிமேல் எந்த காலத்திலும் எந்த பதவிக்கும் எடப்பாடியால் வர முடியாது என்பதுதான் உண்மை. ஜி.கே.வாசன் என்ற ஒரு மனிதர் தமிழகத்தில் இருப்பதாக யாருக்கும் தெரியாது. அவ்வப்போது தவளை சத்தம் போடுவதுபோல், ஏதேனும் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவரை தற்போது அவர் நிழல் கூட தொடர்ந்து வருவதில்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது... உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.