மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் விஸ்வரத்தினம் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ” மத்திய அரசு மக்களின் துயரத்தை உணர்ந்து இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு இ-பாஸ் முறையை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.
இதனால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் மாவட்டத்துக்குக்கு திரும்ப சிரமப்படுகின்றனர். இ-பாஸ் முறையில் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மருத்துவம், அவரச காரணங்கள் மற்றும் கல்விக்காக செல்ல இ-பாஸ் விண்ணப்பித்தால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இது மனித உரிமை மீறிய செயல் என்பதால் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை.ஜெயச்சந்திரன், மத்திய அரசின் உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயலா? என தமிழ்நாடு அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மீதமுள்ள அமோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அப்புறப்படுத்தப்படும் - காவல் ஆணையர்