ETV Bharat / city

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் - அக்11ல் உத்தரவு - Madras highcourt

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்

author img

By

Published : Sep 16, 2022, 10:20 PM IST

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும்படி வழக்கறிஞர்களை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த பின்னணியில், இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எப்படி அமல்படுத்தலாம் என்பது குறித்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், அவற்றை பரிசீலித்து அறிக்கை அளிப்பதாகவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்று, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் அக்டோபர் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "அம்பேத்கரும் மோடியும்" நூல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.