ETV Bharat / city

வெற்றியைக் கொண்டாட முடியாத சூழல் - புலம்பும் இல. கணேசன் - bjp

சென்னை: திமுக, அதிமுக, பாஜக என எந்தக் கட்சியும் தேர்தல் வெற்றியை கொண்டாட முடியாத ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக இல. கணேசன் கூறியுள்ளார்.

இல கணேசன்
author img

By

Published : May 27, 2019, 12:27 PM IST

மக்களவைத் தேர்தலில் பாஜக இந்திய அளவில் 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருந்தாலும், தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி இருக்கிறது. அதேபோல், அதிமுக தேனியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் தனது கூட்டணிக் கட்சியான பாஜக ஆட்சி அமைத்தாலும், தனது எம்.பி-க்களை டெல்லிக்கு அனுப்ப முடியாதது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க, தமிழ்நாட்டில் 37 இடங்களில் திமுக அபார வெற்றி பெற்றாலும் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் அறிவாலயமும் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இடைத்தேர்தலில் 13 தொகுதிகளைப் பெற்றாலும் தமிழ்நாட்டில் திமுகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக ஒன்பது இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும், எடப்பாடி அச்சத்தில்தான் இருக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு, பாஜக, அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகள் ஒவ்வொரு வழியில் வெற்றியைப் பெற்றாலும் அதை கொண்டாட முடியாத சூழலில் அக்கட்சிகள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவந்தனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திமுக, அதிமுக, பாஜக என எந்தக் கட்சியும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட முடியாத ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து தலைவர்களும் வெளியில் சிரித்து உள்ளே வருத்தப்படக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது' எனவும் கூறினார்.

Intro:Body:

*திமுக, அதிமுக, பாஜக என எந்த கட்சியும் தேர்தல் வெற்றியை கொண்டாட முடியாத ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது - இல.கணேசன்.*

*அனைத்து தலைவர்களும் வெளியில் சிரித்து உள்ளே வருத்தப்படக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது - இல.கணேசன்.*

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.