சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நில ஆக்கிரமிப்புகள் தடுத்தல் மற்றும் அகற்றுதல் குறித்த புதிய சட்டத்தைப் பற்றியும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கொண்டு வரப்படவுள்ள காப்பீடு திட்டம் பற்றியும் கலந்தாய்வு மேற்கொண்டார்.
மேலும் தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கொண்டு வரப்படவுள்ள காப்பீடு திட்டம் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நில ஆக்கிரமிப்புகள் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், அமைச்சர் ஆர். பி.உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.