ETV Bharat / city

நுரையீரல் பாதிக்கப்பட்டவருக்கு எக்மோ சிகிச்சை - ரேலா தனியார் மருத்துவமனை சாதனை - Rela Private Hospital Achievement

கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து இரண்டு மாதங்கள் எக்மோ சிகிச்சையளித்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் நோயாளியின் உயிரை காப்பாற்றி சென்னை தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் முகமது ரேலா

author img

By

Published : Aug 19, 2021, 6:55 PM IST

சென்னையை சேர்ந்தவர் முத்திஜா (56). கடந்த ஏப்ரல் மாதம் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இவர், கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில், முத்திஜாவின் ஆக்கிஜன் அளவு 92 விழுக்காடு மட்டுமே இருந்ததால், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், முத்திஜா குரோம்பேட்டையிலுள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கpபட்டார்.

எக்மோ சிகிச்சை

அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஆறுமுகம் தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது.

கடுமையான மூச்சுத் திணறல் பாதிப்பிலிருந்த முத்திஜாவுக்கு தொடர்ந்து 60 நாள்கள் எக்மோ, வெண்டிலேட்டர் சிகிச்சையளித்து, நுரையீரல் மாற்று சிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் அவரின் உயிரை காபாற்றினர்.

பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்த முத்திஜா 109 நாள்களுக்குப் பிறகு இன்று (ஆக 19) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தன்னுயிரை காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேலா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் முகமது ரேலா, “சென்னை ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முத்திஜாவுக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு இருந்தது. முதலில் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது.

அதில் குணமாகாத நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதும் அவருக்கு குணமாகாததால், நுரையீரல் மாற்று அறுவை செய்ய முடிவு செய்திருந்தோம்.

ஆனால், தொடர்ந்து 60 நாள்கள் அளிக்கப்பட்ட எக்மோ சிகிச்சையால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படாத அளவிற்கு நோயாளியின் உயிரை காப்பாற்றியுள்ளோம். இந்தியாவிலேயே முதல் முறையாக இவ்வாறான சிகிச்சை சென்னை ரேலா மருத்துவமனையில் நடந்துள்ளது.

முக்கிய கருவியாக பார்க்கப்படும் எக்மோ

வருங்காலத்திலும் முத்திஜாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் பூரண குணமடைந்துள்ளார். கரோனா தொற்று மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் பலர் இன்னும் தடுப்பூசி போடாத நிலையில் எக்மோ முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் முகமது ரேலா

இது உயிர் காக்கும் சிறந்த கருவியாக இருக்கும். பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: மதுரையில் வேலைக்கு சாதி, உட்பிரிவு கேட்கும் தனியார் மருத்துவமனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.