ETV Bharat / city

’எம்பிபிஎஸ் மட்டுமே அடிப்படை மருத்துவப்படிப்பாக இருக்க வேண்டும்’ - ஆயுர்வேதா

சென்னை: ஆயுர்வேதம் என்பது இந்திய மருத்துவ முறையே தவிர இந்து மருத்துவ முறை அல்ல என்றும், இந்தியாவில் அடிப்படை மருத்துவப்படிப்பாக எம்பிபிஎஸ் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

union
union
author img

By

Published : Dec 4, 2020, 5:56 PM IST

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மாநில செயலாளர் சாந்தி ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “ மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், மருத்துவக் கல்வியிலும், சிகிச்சை முறைகளிலும் மூடநம்பிக்கைகளையும், அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளையும், போலி அறிவியலையும் புகுத்தி வருகிறது.

ஆயுர்வேதம் என்பது பண்டைய இந்திய மருத்துவ முறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனை இந்து மருத்துவ முறையாக கருதுவது தவறு. ஆயுர்வேத மருத்துவத்தில் முதுநிலை அறுவை சிகிச்சை என்ற படிப்பை உருவாக்கி, ஒரே அறுவை சிகிச்சை நிபுணர், பல், கண், காது மூக்குத் தொண்டை அறுவை சிகிச்சை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனால் மருத்துவ சேவையின் தரம் பாதிக்கும். ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற பெயரில், யோகா மற்றும் ஆயுஷ் பாடத்திட்டங்கள் நவீன அறிவியல் மருத்துவத்தில் புகுத்தப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை 2010, தேசிய நலக்கொள்கை 2017, தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019 போன்றவை அதற்கேற்பவே உருவாக்கப்பட்டுள்ளன.

இது நமது இந்திய நவீன அறிவியல் மருத்துவ முறையின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் மத்தியில் சீர்குலைக்கும். மருத்துவ சுற்றுலாவை பாதிக்கும். எனவே, இந்தியாவில் அடிப்படை மருத்துவப்படிப்பாக எம்பிபிஎஸ் மட்டுமே இருக்க வேண்டும்.

ஆயுர்வேதம் என்பது இந்திய மருத்துவ முறையே தவிர இந்து மருத்துவ முறை அல்ல

புதிதாக ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி புதிய புதிய சிக்கல்களை மேலும் உருவாக்காமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளையும், நவீன அறிவியல் மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். ஏற்கனவே, ஆயுஷ் மருத்துவப்படிப்பு முடித்தவர்களை இணைப்பு படிப்புகள் மூலம் நவீன அறிவியல் மருத்துவர்களாக மாற்ற வேண்டும். மருத்துவ அறிவியலையும், அதன் மதசார்பற்ற தன்மையையும் பாதுகாத்திட, அறிவியல் வளர்ச்சியின் பால் அக்கறை உள்ள அனைவரும் மத்திய பாஜக அரசின் சீர் குலைவு வேலைகளை தடுத்து நிறுத்திட முன் வர வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கோட்டையை தகர்த்த காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.