சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். வரும் 7 ஆம் தேதி கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4 ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி "அமைதிப் பேரணி” நடைபெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.
இதில் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள்- முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது' - திமுக மீது ஈபிஎஸ் காட்டம்