ETV Bharat / city

'அமைச்சர் பாண்டியராஜன் பேரவையைத் தவறாக வழிநடத்துகிறார்' - திமுக குற்றச்சாட்டு - திமுக

சென்னை: இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சட்டப்பேரவையை அமைச்சர் பாண்டியராஜன் தவறாக வழிநடத்துவதாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

thennarasu
thennarasu
author img

By

Published : Feb 19, 2020, 1:58 PM IST

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தொடர்பாக பேச பேரவைத் தலைவர் அனுமதிக்காததால் சட்டபேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, ஏ.வ. வேலு, கே.என். நேரு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தங்கம் தென்னரசு, ”இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியம் என்று அமைச்சர் பாண்டியராஜன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடந்த கூட்டத் தொடரில் தெரிவித்திருந்தார். அவரின் அந்தக் கூற்று அவையைத் தவறாக வழி நடத்துவதாகும். காரணம், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கமளித்த மத்திய உள்துறை இணையமைச்சர், இரட்டைக் குடியுரிமை வழங்க சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தெரிந்தகொண்டே அமைச்சர் பாண்டியராஜன் பேரவைக்குத் தவறான தகவலைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவையைத் தவறாகவும் வழி நடத்தியுள்ளார். இதனால் நேற்று நாங்கள் அவையில் அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வந்தோம். அப்போது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955இன் படி இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு எந்தவித வழியும் இல்லாதபோது, எதன் அடிப்படையில் நீங்கள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறினீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் கேள்விகளுக்கு நேரடியாக அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

அமைச்சர் பாண்டியராஜன் பேரவையை தவறாக வழி நடத்துகிறார் - திமுக குற்றச்சாட்டு

இன்று சட்டப்பேரவை கூடிய பின்பு மீண்டும், நேரமில்லா நேரத்தில் அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. எனவே, இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநில பெண்கள் பாதுகாப்புத் தினமாக அனுசரிக்கப்படும்! - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.