சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் இன்று (ஏப். 3) திமுக பிரமுகர் சவுந்தரராஜன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடியில் சவுந்தரராஜன் 59ஆவது வட்ட திமுக செயலாளராக இருந்து வந்தார். பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்காக தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத கும்பலால் சவுந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
விசாரணை: கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த இவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பேருந்தில் அத்துமீறிய நபர் - குண்டூசியால் குத்தி தட்டிக்கேட்ட பெண்!'