தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சியினருக்கும் தேர்தல் நடத்தை விதிகளை அறிவித்துள்ளன.
கட்சி சார்பாக போஸ்டர், பேனர், பெயர் பலகை போன்றவற்றை வைக்கக்கூடாது எனவும் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா எனப் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு சுதந்திர நகர் வாட்டர் டேங்க் பகுதியில் திமுக கட்சி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் போஸ்டர் ஒட்டிய திமுக பிரமுகர் பாபு மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இதேபோல், வள்ளுவர் கோட்டம் அருகே மவுண்ட் சாலையை சேர்ந்த திமுக பிரமுகர் பாஸ்கர் என்பவர் மீதும் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து பிணையில் விடுவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021; அரசியல் கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் உடனுக்குடன்!