ETV Bharat / city

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.08) நடைபெற்றது.

Tamilnadu Local body elections
Tamilnadu Local body elections
author img

By

Published : Aug 8, 2021, 12:01 PM IST

ஏற்கனவே 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamilnadu Local body elections
அண்ணா அறிவாலயம்

இந்ந நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும் பொருளாளருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மாநில தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Tamilnadu Local body elections
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதியன்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோயில்களில் வழிபாட்டிற்கு தடை - அமைச்சர் சேகர் பாபு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.