இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதிமுக அரசுக்கு எதிரான பரப்புரை வியூகம் உள்ளிட்டவை பற்றியும், உட்கட்சி பூசலால் சில இடங்களில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊழல் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா? மு க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி சவால்