ETV Bharat / city

கரோனாவில் காட்டும் அலட்சியம் வெட்டுக்கிளியிலும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின் - வெட்டுக்கிளிகள்

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு காட்டி வரும் அலட்சியத்தை போன்று வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுத்திடும் விவகாரத்திலும் தொடரக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin
author img

By

Published : May 30, 2020, 12:38 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகளால், அங்குள்ள மக்கள் பதற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு என இயற்கை ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் தெரிவிக்கிறார்கள். அதேசமயம், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு கரோனாவில் காட்டிய அலட்சியத்தை இதிலும் தொடராமல், வெட்டுக்கிளிகளால் ஏற்படும் இழப்பும், தம் தலையில் விழுந்து விடுமோ என்ற பீதி, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்க, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாக தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.