ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டம்: கையெழுத்து இயக்கத்தை அறிவித்தது திமுக கூட்டணி! - குடியுரிமை திருத்தச் சட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகிய மூன்றையும் கண்டித்து தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

meet
meet
author img

By

Published : Jan 24, 2020, 1:45 PM IST

Updated : Jan 24, 2020, 3:26 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகிய மூன்று விவகாரங்கள் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ' இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு தயாரிக்க தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்றும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன' என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் - கையெழுத்து இயக்கத்தை அறிவித்தது திமுக கூட்டணி

இம்மூன்று பிரச்னைகளிலும் மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதிவரை நடைபெறக்கூடிய இக்கையெழுத்து இயக்க முடிவுகளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

மாவட்டம், ஒன்றியம், நகரம் என அனைத்து இடங்களிலும், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளனர் என்று கூறிய ஸ்டாலின், இதற்கு கட்சி சார்பற்ற இயக்கங்கள், மாணவர்கள் என அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்ற திமுக தலைவர், 95 ஆண்டு காலம் சமூக நீதிக்காக போராடியவரின் சிலை உடைப்பு என்பது வேதனை தரக்கூடிய ஒன்று என்றார். இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளைக் காவல் துறையினர் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

எழுவர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்ற மு.க. ஸ்டாலின், தற்போதாவது அதிமுக அரசு ஆளுநரைச் சந்தித்து எழுவர் விடுதலையை வலியுறுத்துமா என்றும் கேள்வி எழுப்பினார். தும்பைவிட்டு வாலைப்பிடிப்பது போல் நீட் விவகாரத்தில் நீதிமன்றம் செல்வதுபோல் தமிழ்நாடு அரசு நாடகமாடுவதாகவும் அவர் சாடினார்.

இதையும் படிங்க: ‘பாஜக கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு செய்யும்’ - அமைச்சர் காமராஜ்

Intro:Body:இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகிய மூன்றை பற்றி ஆலோசனை நடத்த திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது.

இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்று நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து மக்களை பாதிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு தயாரிக்க தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதற்காக ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்க முடிவு செய்துள்ளோம். பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை பெறக்கூடிய கையெழுத்தை இந்திய நாடு ஜனாதிபதி சந்தித்து கொடுக்க உள்ளோம். அதனை முன்னிட்டு மாவட்டம், ஒன்றையும், நகரம் என அனைத்து இடங்களில் மக்களை சந்தித்து மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் மக்களை சந்திக்க உள்ளனர். இதற்கு கட்சி சார்பற்ற இயக்கங்கள், மாணவர்கள் ஆதரவுக்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

அமித்ஷா குடியுரிமை சட்டம் திரும்ப பெறமுடியாது என்று கூறி வருகிறார் நாங்கள் அதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றோம். தீர்வு கிடைக்க வேண்டும் என்றுதான் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

பெரியார் சிலை உடைப்பு கண்டிக்கதக்க ஒன்று. 90 வருட காலம் சமூக நீதிக்காக போராடியவர் சிலை உடைப்பு வெட்கம், வேதனை தரக்கூடிய ஒன்று.

தமிழக ஒற்றுமை மேடை வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி அறிவுத்துள்ள மனித சங்கிலிக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் திமுக கூட்டணி உள்ளது.

எழுவர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது..தற்போதாவது இந்த அரசு ஆளுநரை வலியுறுத்துமா என்று கேள்வி எழுப்புகின்றேன்.

நீட் விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போடுகின்றது. தும்ப விட்டு வாலை பிடிப்பது போல் நீதிமன்றம் செல்வது போல் நாடகம் செய்து அடிமையாக உள்ளது அதனால் மத்திய அரசு துணிவுடன் நீட் விவகாரத்தில் உள்ளது.

ஜனநாயக நாட்டு பட்டியலில் இந்திய பின் தங்கி உள்ளதை மூடி மறைக்க மத்திய அரசு சதி திட்டங்களை செய்து வருகின்றது என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Jan 24, 2020, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.