நடப்பாண்டு மருத்துவக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கடந்த 3 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம். 16 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், மருத்துவக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் சேர 21 ஆயிரத்து 63 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 19,054 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 12,312 மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் சேர 11 ஆயிரத்து 237 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 9,536 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும், அதில் 5,678 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் சமர்பித்துள்ளனர் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வீழ்வது தொழிலாளர் விரோதப்போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும்!'