ETV Bharat / city

நடிகர் சித்தார்த்துக்குச் சென்னை காவல்துறை சம்மன் - டிஜிபி சங்கர் ஜிவால் - சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் சித்தார்த்துக்குச் சென்னை காவல்துறை சம்மன் அனுப்பி இருப்பதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால்
டிஜிபி சங்கர் ஜிவால்
author img

By

Published : Jan 20, 2022, 10:56 PM IST

சென்னை: நடிகர் சித்தார்த்துக்குச் சென்னை காவல்துறை சம்மன் அனுப்பி இருப்பதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் தொகுப்பாளர் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இழிவாக கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை நீக்கி மன்னிப்பும் கோரினார்.

காவல்துறை வழக்குப்பதிவு

இந்த நிலையில், நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளதாகக் கூறினார்.

டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஏற்கனவே ஹைதராபாத் காவல்துறை சாய்னா நேவால் குறித்த சர்ச்சை கருத்து புகாரில் நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்துக்கு சம்மன்

மேலும், பெண் தொகுப்பாளர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் படி குற்றப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும், இதனால் இரு விவகாரத்திலும் வாக்குமூலம் பெற நடிகர் சித்தார்த்துக்குச் சம்மன் அனுப்பி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா காலம் என்பதால் நடிகர் சித்தார்த்திடம் எந்த முறையில் விசாரிப்பது என ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.500 கோடி கிராவல் மண் விவகாரம்; விசாரணை வளையத்துக்குள் ஓபிஎஸ்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.