சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Regional Meteorological Centre) இன்று (நவம்பர் 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (Depression over Bay of Bengal) காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள், வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 21 நிலவரம்
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நாளை (நவம்பர் 21) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்
நவம்பர் 22 நிலவரம்
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி, நீலகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
நவம்பர் 23, 24 நிலவரம்
தென் மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும்
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணிநேரத்தில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், நவம்பர் 24ஆம் தேதிவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்யும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Air Force Rescue: ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை