ETV Bharat / city

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: லெப்டினென்ட் ஜெனரல் முதலமைச்சருக்கு நன்றி! - சென்னை தஷிண் பாரத்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது அனைத்து உதவிகளையும் மேற்கொண்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தஷிண் பாரத்தின் ஜெனரல் கமாண்டிங் லெப்டினென்ட் அ. அருண் நன்றி தெரிவித்துள்ளார்.

தஷிண் பாரத், Dakshin Bharat, Commanding Lieutenant Arun thank cm stalin, தஷிண பாரத் ஜெனரல் கமாண்டிங் லெப்டிணட் அருண் கடிதம்
தஷிண் பாரத்
author img

By

Published : Dec 13, 2021, 11:24 AM IST

Updated : Dec 13, 2021, 12:47 PM IST

சென்னை: கமாண்டிங் லெப்டினென்ட் ஜெனரல் அ. அருண் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,"டிசம்பர் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞர்களை ஈர்க்கும்

தகவல் அறிந்த உடனே, நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள், அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்துவிட்டீர்கள்.

அந்த தருணத்தில் என்ன உதவிகளை செய்ய முடியுமோ, அந்த உதவிகளையெல்லாம் தங்களின் தலைமையின்கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

அனைவருக்கும் நன்றி

உங்களுடைய இந்த செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணர்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு, தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும், நமது மாநிலத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காசி விஸ்வநாதர் கோயிலின் புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர்

Last Updated : Dec 13, 2021, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.