ETV Bharat / city

நெருங்குகிறது நிவர் புயல்... 24 மணிநேரத்தில் உருவாகும் எனத் தகவல்! - nivar cyclone latest news

சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயல், நவம்பர் 25ஆம் தேதி பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நேரத்தில், மணிக்கு 55 முதல் 120 கி.மீ., வேகம் வரை காற்று வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

nivar cyclone, நிவர் புயல், நிவர் புயல் செய்திகள், nivar cyclone latest news, nivar cyclone latest updates
nivar cyclone
author img

By

Published : Nov 23, 2020, 8:49 AM IST

Updated : Nov 23, 2020, 9:59 AM IST

சென்னை: வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

  • Bulletin no. : ௦9 (Arabic / ௦4 / 2020) Dated:23.11.2020
    Sub: (1) Well Marked Low Pressure area intensified into Depression over southwest and adjoining southeast Bay of Bengal- (cyclone Watch for Tamilnadu and Puducherry coasts)

    — TN SDMA (@tnsdma) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் புயலுக்கு ‛நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை மறுநாள், அதாவது நவம்பர் 25ஆம் தேதி பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Isolated extremely heavy rainfall activity also very likely over Tamilnadu & Puducherry during 24h & 25" and over south Coastal Andhra Pradesh & Rayalaseema on 25th & 26 "and over Telangana on 26" November, 2020.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 முதல் 120 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

nivar cyclone, நிவர் புயல், நிவர் புயல் செய்திகள், nivar cyclone latest news, nivar cyclone latest updates
நிவர் புயல்

Last Updated : Nov 23, 2020, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.