ETV Bharat / city

காவலில் மரணமடைந்த ராஜசேகரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு - kodungaiyur lockup death

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மரணமடைந்த விசாரணை கைதி ராஜசேகர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

custodial-death-police-protection-for-victim-family-hrc-order

author img

By

Published : Jun 14, 2022, 6:13 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போலீசார் தாக்கியதாலேயே ராஜசேகர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி, உடற்கூராய்வு முடிந்த நிலையிலும் உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நேற்று (ஜூன் 14) உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜசேகரின் குடும்பத்தினரினர் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உடற்கூராய்வு அறிக்கை இதுவரை தரப்படவில்லை என்றும் மாநில மனித உரிமை ஆணையத்தில் இன்று (ஜூன் 14) புகார் அளித்தனர்.

இதற்கு மனித உரிமைகள் ஆணையம் ராஜசேகரின் தாயார் உஷாராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை சென்னையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைக்கும்படியும், தேவையான பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு ராஜசேகரின் உடற்கூராய்வு அறிக்கையை விரைவில் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காவல் துறையின் தவற்றை மறைக்க பணம்? மரணமடைந்த ராஜசேகரின் தாய் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.