ETV Bharat / city

உர மானியம் குறைப்பை கைவிடுக! - முத்தரசன் வேண்டுகோள்!

சென்னை: விவசாயிகளுக்கு உர மானியம் குறைப்பதை கைவிடுமாறு மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

mutharasan
mutharasan
author img

By

Published : Apr 24, 2020, 7:15 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானிய உதவியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, வாழை, பலா, மலர்கள் என சாகுபடி செய்த பலவகை பயிர்கள் விளைந்தும், அவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இந்தச் சூழலில் கடந்த 22 ஆம் தேதி டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விவசாயிகள் வாங்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற உரங்களுக்கான மானியத்தை வெட்டிக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிடைத்து வரும் மானியத்தில் சுமார் 700 கோடி ரூபாயை பறித்துக் கொண்டுள்ளது.

ஏற்கனவே, தாராளமயக் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்கொலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் விவசாயிகளின் மானியத்தை வெட்டியிருப்பது ’வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ வேதனை அளிப்பதாகும். எனவே, விவசாயிகளுக்கு வழங்கி வரும் உர மானியத்தை வெட்டிக் குறைக்காமல், தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசு இந்நடவடிக்கையை கைவிட தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் “ என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.