சென்னை: உலகம் முழுவதும் கரோனா என்ற தொற்று நோய்ப் பரவி உலகம் முழுவதையும் நிலை குலையச் செய்தது. இந்த கரோனவால் தமிழ்நாட்டிலும் பல லட்ச மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையும், பொருளாதாரமும் சரிவையே சந்தித்தது. கரோனா இரண்டு அலைகளின்போதும் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகியிருந்தது.
இதனையடுத்து வந்த 3ஆவது அலையில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் கரோனா 4ஆவது அலைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்று 100-க்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த 3 நாட்களில் கரோனாவால் யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கான்பூர் ஐஐடி ஜூன் மாதம் இறுதிக்குள் கரோனா 4ஆவது அலை ஏற்படும் எனக் கூறியுள்ளது. இதுகுறித்துப் பதிலளித்த ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் 92 விழுக்காடு பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 80 விழுக்காடு பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் இரண்டு தவணை தடுப்பூசிகளும் போட அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்டதா அண்ணா பல்கலை?