இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்தத் தகவலில், ”தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 78,349 பேர் முடித்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் 842 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.
தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 34 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மேலும், விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனி வார்டில் ஆயிரத்து 891 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
29 ஆயிரத்து 673 பேரிடமிருந்து ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு அவர்களில் 1,323 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21,628 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இரண்டாயிரத்து 23 நபர்களின் ரத்தம், சளி ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 4,699 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று வரை 1,267 பேராக இருந்த கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 1,323 பேராக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பலன் அளிக்காமல் 15 பேர் இறந்துள்ளனர். மேலும், தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்டிலேட்டர் 3,371ம், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.
இன்று நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 11 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், கரூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், தேனி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் நான்கு பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் மூன்று பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் இன்றைய நிலவரம்:
- சென்னை மாவட்டம் - 228
- கோயம்புத்தூர் மாவட்டம் - 127
- திருப்பூர் மாவட்டம் - 80
- ஈரோடு மாவட்டம் - 70
- திண்டுக்கல் மாவட்டம் - 66
- திருநெல்வேலி மாவட்டம் - 58
- செங்கல்பட்டு மாவட்டம் - 50
- நாமக்கல் மாவட்டம் - 50
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 46
- திருவள்ளூர் மாவட்டம் - 46
- மதுரை மாவட்டம் - 44
- தேனி மாவட்டம் - 43
- கரூர் மாவட்டம் - 42
- நாகப்பட்டினம் மாவட்டம் - 40
- ராணிப்பேட்டை மாவட்டம் - 39
- தஞ்சாவூர் மாவட்டம் - 35
- தூத்துக்குடி மாவட்டம் - 26
- விழுப்புரம் மாவட்டம் - 26
- சேலம் மாவட்டம் - 24
- வேலூர் மாவட்டம் - 22
- திருவாரூர் மாவட்டம் - 21
- கடலூர் மாவட்டம் - 20
- விருதுநகர் மாவட்டம் - 17
- திருப்பத்தூர் மாவட்டம் - 17
- கன்னியாகுமரி மாவட்டம் - 16
- தென்காசி மாவட்டம் - 14
- திருவண்ணாமலை மாவட்டம் - 12
- சிவகங்கை மாவட்டம் - 11
- ராமநாதபுரம் மாவட்டம் - 10
- நீலகிரி மாவட்டம் - 9
- காஞ்சிபுரம் மாவட்டம் - 8
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 3
- அரியலூர் மாவட்டம் - 2
- பெரம்பலூர் மாவட்டம் - 1
மேலும், இன்று 103 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 283 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்