ETV Bharat / city

விலைவாசி உயர்வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் - பெட்ரோல்

விலைவாசி உயர்வு, மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

author img

By

Published : Aug 31, 2022, 10:43 AM IST

சென்னை: அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற்றிட வலியுறுத்தி நேற்றைய (ஆக.30) தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த வகையில் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

குறிப்பாக, இதில் விலைவாசி உயர்வு, மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் விவகாரம்.. கருத்து கேட்க வந்த எஸ்டிபிஐ கட்சியினர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.