தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ”வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை விரைவு அஞ்சல் மூலம் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். இதற்காக 5 ஆண்டுகளுக்கு தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 21,39,395 முதல் வாக்காளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்கும் முதல் வாக்காளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.
வெளி மாநிலத்தவர்களுக்கும் இதே போன்று அடையாள அட்டை வழங்க திட்டம் உள்ளது. அவர்கள் விண்ணப்பித்தால், அதற்கான உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு வழங்கப்படும். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரும் 10 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அப்போது, தலைமைச் செயலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: 50 குழந்தைகள் உள்ள பழங்குடியின கிராமம்: அங்கன்வாடி அமைத்து தரக் கோரிக்கை!