ETV Bharat / city

புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் : கூட்டுறவு பயிர் மற்றும் கல்விக்கடன்கள் ரத்து! - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் கூட்டுறவு பயிர்க்கடன், கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய ரூ. 9 ஆயிரத்து 924 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.26) அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையை கொண்டு வரும் முதலமைச்சர் ரங்கசாமி

author img

By

Published : Aug 26, 2021, 7:46 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 2021 - 2022ஆம் ஆண்டிற்கு ரூ. 9 ஆயிரத்து 924 கோடி மதிப்புடைய
நிதிநிலை அறிக்கையை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.26) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், '2021-2022ஆம் ஆண்டிற்கு ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்த முதலமைச்சர் ரங்கசாமி

இதில் ரூ. 2 ஆயிரத்து 140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும்; ஆயிரத்து 715 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டிக்கும், ஆயிரத்து 591 கோடி ரூபாய் மின்சாரம் வாங்கவும், ஆயிரத்து 290 கோடி ரூபாய் முதியோர் உதவித்தொகைக்கும், ஆயிரத்து 243 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது' என்றார்.

நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

  • அதில், 'புதுவை - ஈ.சி.ஆர் சாலையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, நவீன வேளாண் வளாகம் அமைக்கப்படும். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
  • இலவச அரிசிக்காக ரூ. 197 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன், மாணவர்களின் கல்விக் கடன் ஆகியவை ரத்து செய்யப்படும்.
  • புதுவையில் செயல்படுகின்ற 5 அரசு பள்ளிகளானது, தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாதிரி பள்ளிகளாக உருவாக்கப்படும்.
  • புதுவை அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு ரூ. 51 லட்சம் செலவில், தற்காப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படும். புதுச்சேரி கல்வித்துறைக்கு ரூ. 742 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஐந்துக்கும் மேற்பட்ட புதிய தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு, புதிய நவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்படும்.
    நிதிநிலை அறிக்கையை கொண்டு வரும் முதலமைச்சர் ரங்கசாமி
    நிதிநிலை அறிக்கையை கொண்டு வரும் முதலமைச்சர் ரங்கசாமி
  • கோரிமேடில் 500 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை அமைக்கப்படும். புதுச்சேரியில் மீண்டும் நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படும்.
  • 100 ஏக்கரில் கைவினை கிராமம் தொடங்கப்படும். மணல் பற்றாக்குறையைப் போக்க மணப்பட்டில் மணல் குவாரி அமைக்கப்படும்.
  • ரூ. 2 கோடி செலவில் பாகூரில் புதிய பேருந்து நிலையம், ஏனாமில் ரூ. 7 கோடி மதிப்பில் ANM பள்ளி ஆகியவை அமைக்கப்படும். மாஹே பகுதியில் ரூ. 19 கோடி செலவில் கடலோர காவல் நிலையம், தங்கும் விடுதி ஆகியவை அமைக்கப்படும்.
  • வாரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஏற்ப, சுற்றுலாத் திட்டங்கள் மேம்படுத்தப்படும். பாரம்பரிய சுற்றுலா, சாகச சுற்றுலா, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை ஊர்களில் சுற்றுலா தனியார் பங்களிப்போடு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
  • காரைக்கால் கடற்கரை சுற்றுலா திட்டங்களுடன் மேம்படுத்தி, மணப்பட்டில் பொழுது போக்கு பூங்கா, பாய்மரப் படகு பயணத்திட்டம் கொண்டு வரப்படும்.'

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரை நிறைவு பெற்ற பின்னர், சட்டப்பேரவையை நாளை காலை 9.30 மணி வரை, சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், ஒன்றிய அரசு விற்பனையில் பிஸி- ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.