ETV Bharat / city

‘மக்களை தேடி செல்லும் அரசு திமுக’ - ஸ்டாலின் - மக்களை தேடி மருத்துவம்

சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ‘அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களைத் தேடி அரசு செல்லும் காலம் இது’ என தெரிவித்துள்ளார்.

‘மக்களை தேடி செல்லும் அரசு திமுக’ - ஸ்டாலின்

author img

By

Published : Sep 24, 2021, 1:12 PM IST

சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப்பழமையான ஆணைபுலி பெருக்கமரம் என்றழைக்கப்படும் பெருக்க மரம் குறித்த கல்வெட்டை திறந்து வைக்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர், உலக காது கேளாதோர் வாரத் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக காது கேளாத குழந்தைகளுக்கு கருவிகளையும் பொருத்தினார்.

காது கேட்கும் கருவியை பொருத்திய ஸ்டாலின்

பின்னர், முதலமைச்சரை வரவேற்று பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “10 முதல் 12 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத சென்னை மருத்துவக் கல்லூரி அரங்கம் தற்போது முதலமைச்சர் வருகையால் 186 ஆண்டு கால பழமையான அரங்கம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஒரு கோடி பேர் பயன்

200 ஆண்டுகள் பழமையான மரத்தின் குறிப்பேடு திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் பெருக்கமரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 10 லட்சத்து 10 ஆயிரத்து 916 பேர் இதுவரை மக்களைத் தேடி மருத்துவத்தில் பயனடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி பேர் பயனடைவார்கள். அனைத்து மாவட்டங்களிலும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான மையம் செயல்படும்” எனத் தெரிவித்தார்.

கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கும் அரசு

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உலக காதுகேளாதோர் வாரம் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இந்த ஒருவாரம் மட்டும் இந்த மக்களைப் பார்க்கும் அரசு அல்ல. தொடர்ந்து மக்களை காக்கும் அரசுதான் திமுக. 1971ஆம் ஆண்டு கருணாநிதி பிறந்த நாளை பிச்சைகாரர்கள் மறுவாழ்வு எனும் திட்டத்தை கொண்டு வந்தார். 1972ஆம் ஆண்டு காணொளி திட்டம் கொண்டுவரப்பட்டது.

செவித்திறன் கண்டறிய உதவும் கருவி
செவித்திறன் கண்டறிய உதவும் கருவி

அதேபோல, எனது பிறந்த நாளை அண்ணா மேம்பாலம் அருகேவுள்ள லிட்டில் லீலவர்ஸ் பள்ளியிலுள்ள காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கும். குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் செவிகொடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.

மக்களைத் தேடி செல்லும் அரசு திமுக

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 35ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செலவில் புதிய செவித்திறன் கருவி வழங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாடு அரசுக்கு நல்ல பெயரை தேடி கொடுத்துள்ளது. சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

ஸ்டாலின் பேச்சு

அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களைத் தேடி அரசு செல்லும் காலம் இது. எதிர்க்கட்சிகளே புகழ்ந்து பேசும் அமைச்சராகா மா சுப்பிரமணியன் திகழ்கிறார். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள் ஆனால், அழாத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு இருக்கம்” என்றார்.

இதையும் படிங்க: ‘திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சி’ - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.