ETV Bharat / city

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் - கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்

author img

By

Published : Dec 16, 2021, 8:09 PM IST

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம், தற்போது ரூ. 72,000 என உள்ளது.

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநரின் கத்துருவினை பரிசீலனை செய்து. அரசால் 1,414 ( 771 அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் + 643 செய்தியாளர் அட்டைகள் ) அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வருமான உச்சவரம்பின்றி இணைக்கவும்.

இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையிடமிருந்து விரிவான மருத்துவக் நடைமுறையிலுள்ள, காப்பீட்டுத் திட்டத்தின் எதிர்வரும் முதலமைச்சரின் விதிமுறைகளுக்குட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களைப் பெற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் உத்தரவிடப்படப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது அறிவித்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: வேகமாகப் பரவும் ஒமைக்ரான்... தமிழ்நாட்டில் ஒன்பது பேருக்கு பாதிப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.