முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப்படும் கருணாநிதி இயற்கை எய்திய இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில், வடக்கு மாநில திமுக சார்பில் செஞ்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில், வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்ற விழாவில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி அமைப்பாளர் யூனுஸ், கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர், கருணாநிதியின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அவரது சாதனை பட்டியல்களை பேனரில் பொறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெளியிட்டனர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செய்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.