ETV Bharat / city

'பூங்கொத்தோ , பொன்னாடையோ வேண்டாம்' - புத்தகம் கேட்கும் ஸ்டாலின் - stallin ask to give books

தன்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்த்து புத்தகம் வழங்கினால் போதும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புத்தகம் கேட்கும் ஸ்டாலின்
புத்தகம் கேட்கும் ஸ்டாலின்
author img

By

Published : May 14, 2021, 6:00 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா சூழ்நிலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கருணை உள்ளத்துடன் பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.

என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்புகள் தரப்பட்டுள்ளன.

மு க ஸ்டாலின் கோரிக்கை
மு.க. ஸ்டாலின் கோரிக்கை

கரோனா தொற்று காலத்தில் இதுபோன்ற வரவேற்பை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கண்டிக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியே மிக முக்கியம்.

நாம் நமது செயல்களின் மூலமாக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடிப்போம். சாதனைகளின் மூலமாக மக்கள் அன்பைப் பெறுவோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.