செங்கல்பட்டு: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் தாலுகாவிற்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு முதலமைச்சரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற தாம்பரம் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தனர்.
அதன்படி முதலமைச்சரின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின்படி, தாம்பரம் வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் 65 பயனாளிகளுக்கு நிவாரண நிதியாக 33 லட்சம் ரூபாய் காசோலையை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாச்சியர் சரவணன் ஆகியோர் வழஙகினார்.
அப்போது வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.