தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டுவருகிறது.
இதனைத் தொடர்ந்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், ஆயிரத்து 508 ஆய்வக நுட்புணர்கள், 530 மருத்துவர்கள், ஆயிரம் செவிலியர் ஆகியோரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய விதிகளுக்குள்பட்டு தெரிவுசெய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இவர்கள் உத்தரவு கிடைக்கப்பட்டவுடன் மூன்று தினங்களுக்குள் உடனடியாகப் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 200 அவசர ஊர்திகளை உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கை கடுமையாகப் கடைப்பிடிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்