முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில், நாகப்பட்டினம் மாவட்டம், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தஞ்சாவூர் மாவட்டம், வெண்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி, சிவகங்கை மாவட்டம், கழுகேர்கடை கிராமத்தைச் சேர்ந்த சாதிக் அலி, திருவள்ளூர் மாவட்டம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், கொளத்தூர் துணை மின் நிலையத்தில் கம்பியாளராகப் பணிபுரிந்துவந்த முனுசாமி, நீலகிரி மாவட்டம், ஜெகதளா கிராமத்தைச் சேர்ந்த பிரவீன், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த மங்கம்மா, சேலம் மாவட்டம், எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாபு, திருவண்ணாமலை மாவட்டம், தச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிபிராஜ் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கியும் மற்றும் பாம்பு கடித்தும் உயிரிழந்த மேற்கண்ட 11 பேரின் குடும்பங்களூக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயர நிகழ்வுகளில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை பேசின் பாலம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!