ETV Bharat / city

ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை புறநகர்!

author img

By

Published : Jul 28, 2020, 6:41 PM IST

சென்னை: புறநகர் பகுதிகளில் இன்று பெய்த கனமழையால் சாலை முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

flood
flood

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிற்பகலில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் ஜிஎஸ்டி சாலை முழுவதும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சூழலால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையில் ஆங்காங்கே மழையில் நனைந்தபடி நிற்கவேண்டிவந்தது.

ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை புறநகர்!

இதனிடையே, பாதாள சாக்கடைகள் முறையாக கட்டப்படாததுதான், ஒருநாள் மழைக்கே நீர் வெள்ளம்போல் சாலையில் ஓடுவதற்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.