சென்னை: உலகை அச்சுறுத்தி வருகிற கரோனா வைரஸின் தொற்றால் லேசான மற்றும் மிதமான பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் இன்டோமெத்தசின் (Indomethacin) என்ற மருந்தின் செயல்திறன் நல்ல பலனைத் தருவதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிப் பணியில் இன்டோமெத்தசின் என்ற குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மருந்தால், லேசான கரோனா நோய்த்தொற்றுக்கான புதிய சிகிச்சை முறையை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த இன்டோமெத்தசின் மருந்தை கரோனா நோயாளிகளுக்குத் தரலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஐஐடியின் நிறுவன பேராசிரியரான கிருஷ்ணகுமாரின் ஒருங்கிணைப்பில், பனிமலர் மருத்துவக்கல்லூரி மற்றும் சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுதிநேர ஆசிரியரும், மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான ராஜன் ரவிச்சந்திரன் தலைமையில் கரோனாவைக் குணப்படுத்தும் விலை மலிவான மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
இதனால், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, கரோனா தொற்று பாதிப்பு ஆரம்பநிலையில் இன்டோமெத்தசின் அளித்தால் எளிதில் குணமடைவார்கள். இதனை சென்னை ஐஐடியில் ஆய்வாக செய்துள்ளோம்' என்றார்.
இது குறித்து சென்னை ஐஐடியின் நிறுவன பேராசிரியர் கிருஷ்ணகுமார் கூறுகையில், 'கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்டோமெத்தசின் மருந்து பரிசோதனைக்கு 210 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிகிச்சையில் ஆக்ஸிஜன் பயன்பாடு குறையும்: அவர்களில் 107 பேர் பாராசிட்டமால் மற்றும் நிலையான சிகிச்சை முறை அளிக்கப்பட்டது. 103 நோயாளிகளுக்கு நிலையான சிகிச்சையுடன் இன்டோமெத்தசின் செலுத்தப்பட்டது. பின், அந்த நோயாளிகள் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டல் போன்ற அறிகுறிகளுக்காகத் தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இன்டோமெத்தசின் செலுத்தப்பட்ட 103 நோயாளிகளில் எவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை.
3-லிருந்து 4 நாட்களுக்குள் பாதிப்பிலிருந்து மீளலாம்: ஆனால், பாராசிட்டமால் மருந்து அளிக்கப்பட்டவர்களில் 109 பேரில் 20 பேருக்கு 93 விழுக்காட்டிற்கும் குறைவான ஆக்சிஜன் செறிவூட்டல் நிலை ஏற்பட்டது. இன்டோமெத்தசின் மாத்திரை அளிக்கப்பட்ட நோயாளிகள் மூன்று அல்லது நான்கு நாட்களில் அனைத்து அறிகுறிகளிலிருந்தும் மீண்டுவிட்டனர். கல்லீரல், சிறுநீரக செயல்பாடு சோதனைகளின்போது, எந்த எதிர்மறையான எதிர்வினையையும் காட்டவில்லை. மேலும், சோர்வாக இருப்பதாக மட்டுமே தெரிவித்தனர். ஆனால், பாராசிட்டமால் சிகிச்சையிலிருந்தவர்கள் 14 நாட்கள் கடந்தும் முழுமையாகக் குணமடையவில்லை.
ICMR-க்கு வேண்டுகோள்: இன்டோமெத்தசின் அனைத்து விதமான உருமாறிய நோய்த் தொற்றுகளிலும் செயல்படுகிறது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் தலா ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டோம். இரண்டிலுமே முடிவுகள் ஒரே மாதிரியாகவே உள்ளன. இந்த ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Council of Medical Research) கவனித்து, கரோனா சிகிச்சை முறையில் இன்டோமெத்தசினை பயன்படுத்திக் கொள்ளும்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் லேசான மற்றும் மிதமான நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிசிச்சையில், ஸ்டெராய்ட் அழற்சி எதிர்ப்பு மருந்தான இன்டோமெத்தசின் (Indomethacin) மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது என்று நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Journal of Nature Scientific Reports) என்ற இதழில் மதிப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Special: சென்னை ஐஐடியில் செயற்கை முழங்கால் அறிமுகம்