ETV Bharat / city

'அலுவலர்கள் வெட்கப்படவேண்டும்' - தியாகிகள் பென்ஷன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பென்ஷனுக்கு 99 வயது முதியவரை நீதிமன்றத்திற்கு நாட செய்த குற்றத்திற்கு அலுவலர்கள் வெட்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Chennai high court judgement to benson case filled by Kapoor

author img

By

Published : Dec 9, 2020, 7:30 PM IST

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கஃபூர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி நாட்டு விடுதலைக்காக போராடியுள்ளார். தனக்கு தியாகிகள் பென்சன் வழங்க கோரி 1997ம் ஆண்டு மத்திய- மாநில அரசுகளிடம் விண்ணப்பித்திருந்தார்.
23 ஆண்டுகளாக தனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பென்ஷன் வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி கஃபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக, அலுவலர்கள் வெட்கப்பட வேண்டும் என கண்டனம் தெரிவித்துடன், கபூரின் ஆதார் அட்டை, சக சிறைவாசி கண்ணன் என்பவர் அளித்த சான்று ஆகியவற்றின் அடிப்படையில் ஒய்வூதியம் வழங்குவது குறித்து முடிவெடுத்து தெரிவிக்க உத்தாவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேசிய ராணுவத்தினருக்கான தியாகிகள் ஓய்வூதியமாக கபூருக்கு மாதந்தோறும் 17 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக டிசம்பர் 5-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் அரசாணையுடன், மனுதாரர் சமர்ப்பித்துள்ள ஆவணங்களையும் இணைத்து தமிழ்நாடு அரசு புதிதாக விண்ணப்பித்தால் மனுதாரருக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் மத்திய அரசின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவுசெய்த நீதிபதி சுரேஷ்குமார், தமிழ்நாடு அரசாணையின்படி 30 நாள்களுக்குள் தியாகி கபூருக்கு ஓய்வூதியம் வழங்கி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கபூரின் ஆவணங்களை மத்திய அரசிற்கும் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.