ETV Bharat / city

சென்னையில் 100 சவரன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை!

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் 100 சவரன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2
author img

By

Published : Feb 5, 2019, 11:25 PM IST

அண்ணாநகர் எல் பிளாக் 1வது பிரதான சாலையில் வசித்து வருபவர் சத்திய நாராயணன். இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 100 சவரன் நகை, ரூ.1 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் ஆகியவை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் லாக்கரை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் வெளிநாட்டு மதுபான வகைகளையும் திருடி சென்றதோடு, வீட்டின் இணைய இணைப்பையும் துண்டித்து விட்டுச் சென்றுள்ளனர். அதேபகுதியில் உள்ள எல் பிளாக் 26வது தெருவில் முரளி கிருஷ்ணன் என்பவரது வீட்டிலும் புகுந்த மர்ம நபர்கள் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கண்காணிப்பு கேமராக்களையும் கூடவே எடுத்துச் சென்றுள்ளனர்.

1
1
undefined

இதேபோல், எல் பிளாக் 21வது தெருவில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் பணத்தையும் டிவியையும் தூக்கிச் சென்றுள்ளனர். இந்த மூன்று சம்பவங்கள் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஒரே பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Intro:Body:

Intro:அண்ணாநகரில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு..

Body:அண்ணாநகர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை.

அண்ணாநகரில் 'L' பிளாக் ஒன்னாவது பிரதான சாலையை சேர்ந்தவர் சத்திய நாராயணன் வயது 65 இவர் thiru vi ka nagar இருசக்கர வாகன ஷோரூம் வைத்துள்ளார் இவருடைய மனைவி ஸ்ரீதேவி 53 கணவன் மனைவி இருவரும் ஆந்திர மாநிலத்திற்கு தனது மனைவியின் சகோதரர் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி காக ஒரு வாரத்திற்கு முன் சென்றுள்ளனர் நேற்று காலை வீட்டு வேலையாட்கள் தோட்டத்தின் உள்ள செடிகளை பராமரிக்க கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர் அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது இதுகுறித்து சத்யநாராயணன் சகோதரி ஜான்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர் இன்று காலை வீடு திரும்பிய சத்யநாராயணன் அவரது வீட்டின் பீரோவை பார்க்கையில் 100 சவரன் நகை ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர கைகடிகாரம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் லாக்கரை உடைக்க கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர் மேலும் வெளிநாட்டு மதுபான வகைகளின் திருடி சென்று விட்டதாக சத்தியநாராயணன் தெரிவித்தார் மேலும் கொள்ளையர்கள் இணைய இணைப்பை துண்டித்து வீட்டை விட்டுச் சென்றுள்ளனர்..

இதேபோல் அண்ணாநகர் எல் பிளாக் 26வது தெருவில் முரளி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தார்..அப்போது வீடு புகுந்த மர்ம நபர்கள் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துச் சென்றனர்..

இதேபோல எல் பிளாக் 21ஆவது தெருவில் உள்ள மேக்ஸ் ப்யூரி ஹோட்டல் சுத்தம் செய்யும் பொருட்களை மொத்த விற்பனை தனியார் நிறுவனத்தை செய்யும் வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் பணத்தையும் டிவி யாரையும் தூக்கிச் சென்றுள்ளனர் இச்சம்பவங்கள் குறித்து அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

ஒரே இடத்தில் தொடர்ந்து மூன்று இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Conclusion:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.