ETV Bharat / city

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

சென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

award
award
author img

By

Published : Jun 18, 2020, 4:39 PM IST

Updated : Jun 18, 2020, 5:02 PM IST

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” 2019ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரடியாக ஜூலை 6 ஆம் தேதிக்குள், https://mhrd.gov.in , http://nationalwardstoteacheachers.gov.in என்ற இணையதள முகவரிகளில் நேரடியாகப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்விருதிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஒய்வு பெற்ற ஆசிரியர்களோ, அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களோ இதற்கு விண்ணப்பிக்கக்கூடாது. 2019 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும். 2019 ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பணிபுரிந்து இருக்க வேண்டும் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாடத்திட்டத்தைக் குறைக்க 18 பேர் கொண்ட குழு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Last Updated : Jun 18, 2020, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.