மின் கட்டண உயர்வை கண்டித்தும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைப் போல் தமிழ்நாடு அரசும் மின் கட்டணத்தில் சலுகை வழங்கக் கோரி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடி ஏந்தி நேற்று (ஜூலை 21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோல், துரைமுருகன், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட திமுகவினரும் அவரவர் வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அபிராமபுரம், ராயப்பேட்டை, கிரீன்வேஸ் சாலை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு முன்பாகவும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக கூட்டம் கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராயப்பேட்டை, அபிராமபுரம், கோடம்பாக்கம் உள்பட 6 காவல் நிலையங்களில் 150 திமுகவினர் மீது சட்ட விரோதமாக கூடுதல், தொற்று நோய் பரவல் தடைச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!