பாஜக சார்பில் 20ஆம் தேதி தொடங்கவுள்ள ’ஊருக்குச் செல்வோம்; உண்மையைச் சொல்வோம்; உறக்கச் சொல்வோம்’ என்ற கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பயணப் பயிற்சி முகாம் தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களையும் கையகப்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. ஆனால் சிலவற்றைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென்றால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ரஜினிகாந்த் மிக மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். பாஜகவில் அவர் இணைய வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. ஆனால் அதற்கான காலம் இப்போது இல்லை என்றே நினைக்கிறேன். இருப்பினும் அதுகுறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும்“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த அரசியல் ஆலோசகர்- பி.கே.வுக்கு செக்?