சென்னை: இந்தியா முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தடையில்லா இணையதள சேவை வழங்கி அரசின் சேவைகளை கொண்டு செல்லும் திட்டமே பாரத் நெட் திட்டம். இதற்காக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.1,230 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கண்ணாடி இழை குழாய் மூலம் இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திட்ட ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதன்பின்னர், கிராமபுறங்களில் இணைய சேவையை கொண்டு செல்ல டெண்டர் விடப்படலாம்.
இதையும் படிங்க: Orange Alert: தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்