ETV Bharat / city

குளியல் அறையில் வழுக்கி விழுந்த நிகழ்வுகள் - மனித உரிமைகள் ஆணையம் கேள்வி! - மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை: மாநகர காவல் நிலையங்களில் குளியல் அறைகளில் வழுக்கி விழுந்த நிகழ்வுகள் எத்தனை என காவல் துறை ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

rights
rights
author img

By

Published : May 29, 2020, 4:24 PM IST

அம்பத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக மதுவிலக்கு காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்ததில், தேவேந்திரன் என்பவர் அயம்பாக்கம் பகுதியில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்று சோதனை செய்த காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் பேசி ஆடியோ வெளியிட்ட தேவேந்திரனை கடந்த 27 ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.

தேவேந்திரனிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குளியல் அறையில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் வழக்கை தாமாக விசாரணைக்கு ஏற்ற மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன், ” கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் குளியல் அறைகளில் வழுக்கி விழுந்த நிகழ்வுகள் எத்தனை?

குளியல் அறையில் வழுக்கி விழுந்த நிகழ்வுகள் - மனித உரிமைகள் ஆணையம் கேள்வி!

காவல் நிலையங்களில் காவலர்கள் குளியல் அறைகளில் வழுக்கி விழுந்த நிகழ்வுகள் ஏதும் நடைபெற்றுள்ளதா? குளியல் அறைகளில் வழுக்கி விழும் நிகழ்வுகளை தடுக்க மாநகர காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை என்ன? “ எனக் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக காவல் ஆணையர் இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.