ETV Bharat / city

மரங்களை வெட்ட இடைக்காலத் தடை - ஆரோவில் அறக்கட்டளை தலைவர்

வனப்பகுதியில் சுற்று வட்டச்சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்ட தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

ஆரோவில் அறக்கட்டளைக்கு மரங்களை வெட்ட இடைக்காலத் தடை

author img

By

Published : Dec 10, 2021, 6:47 PM IST

Updated : Dec 10, 2021, 6:56 PM IST

சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர், ஆரோவில் அறக்கட்டளைக்கு எதிராக மனு தாக்கல்செய்திருந்தார். கிரவுண் சாலை என்னும் பெயரில் புதிய சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்காக வனப்பகுதி எனக் கருதப்படும் இடத்தில் அதிக அளவிலான மரங்களை வெட்டியுள்ளதாகவும், அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆரோவில் அறக்கட்டளைக்கு எதிராகக் குற்றஞ்சாட்டி அம்மனுவில் தெரிவித்திருந்தார்.

மரங்களை வெட்டத் தடை

இதனால் மரங்களை வெட்ட தடைவிதிக்க வேண்டும், கூடுதலாக, இதுவரை ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைக்கப்பட்டது.

இடைக்காலத் தடை

இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித் துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இம்மனுவிற்குப் பதிலளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், ஆரோவில் அறக்கட்டளைக்கும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை டிசம்பர் 17ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கல்லூரி மாணவர்களுக்குத் தடுப்பூசி கட்டாயம்; குழுவாக அமர்ந்து சாப்பிடத் தடை'

Last Updated : Dec 10, 2021, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.