சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இந்நிலையில் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை இந்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி உயர் நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும் 17 பேருக்கும் பிணை கிடைக்கவில்லை.
இந்நிலையில் 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை இந்தாண்டு ஜனவரி மாதம் மகளிர் நீதிமன்றம் தொடங்கியது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக என். ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கும் தனித் தனி வழக்குரைஞர்கள் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேர் தரப்பு சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, மொத்தம் 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
கடந்த 11 மாதங்களாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைந்ததையடுத்து சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்தார். இதனிடையே 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
இதையும் படிங்க:
முடக்கப்பட்ட நித்தியானந்தாவின் கடவுச்சீட்டு: புதிய விண்ணப்பமும் ரத்து!