சென்னையில் உள்ள மண்டலங்களில் கரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம். பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரத்தை நெருங்கும் இப்பகுதியில், ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல் ராயபுரம் பகுதியில் 52 ஆவது வார்டில் பொதுமக்களுக்கு மறுபடியும் பயன்படுத்தும் வகையிலான துணி முகக் கவசங்களை சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் அகியோர் வழங்கினர். நகரின் மற்ற பகுதிகளை விட ராயபுரத்தில் அதிக பாதிப்பு உள்ளதால் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: ராயபுரத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய திட்டம்!