ETV Bharat / city

கிரிக்கெட் சூதாட்டம் - முக்கிய குற்றவாளியை தப்ப வைக்க ரூ. 3 லட்சம் லஞ்சம்; சிக்கலில் இன்ஸ்பெக்டர் - காவல் ஆய்வாளர்

சென்னை: கிரிக்கெட் சூதாட்ட வழக்கிலிருந்து தப்ப வைக்க காவல் ஆய்வாளர் மூன்று லட்சம் ரூபாய் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக, பிடிபட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

fixing
fixing
author img

By

Published : Feb 10, 2020, 5:05 PM IST

சென்ற ஆண்டு செப்டம்பரில் ’கரீபியன் லீக் 20’ கிரிக்கெட் போட்டி, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை சூளைப் பகுதியில் ஆன்லைன் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் சூளை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராகுல் டி ஜெயின் (24), தினேஷ் குமார் (29) ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப்கள், 53 லட்சம் ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கியக் குற்றவாளி ஜெய்ஷா என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜெய்ஷாவை நான்கு மாத தேடுதலுக்குப் பிறகு நேற்று மயிலாப்பூரில் பதுங்கி இருக்கும்போது தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சம்பவத்தன்று காவல் துறையினர் நடத்திய சோதனையில் 93 லட்சம் ரூபாய் கைப்பற்றபட்டதாகவும், அதில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த புகார்தாரருக்கு அங்கேயே 40 லட்சத்தை ஆய்வாளர் குணவர்மன் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த 53 லட்சம் ரூபாய் பணத்தை சூதாட்டக்காரர்களிடம் பறிமுதல் செய்த பணம் என்று காண்பித்ததாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதற்காக ஆய்வாளர் குணவர்மன் புகார்தாரரிடமிருந்து ஏழு லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வழக்கறிஞர் மூலம் தன்னைச் சந்தித்த ஆய்வாளர் குணவர்மன் தன்னை ஜாமீன் வாங்கிக் கொள்ளுமாறுக் கூறியதுடன், அதற்காக மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெங்களூர் தப்பிச் சென்று அங்கு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தும், அது நிராகரிக்கப்பட்டதால் மைலாப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்ததாகவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருந்த ஹார்ட் டிஸ்கை, ஆய்வாளர் குணவர்மன் எடுத்துக் கொண்டு வேறு ஹாட்டிஸ்க்கை அதில் பொருத்திவிட்டதாகவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி, காவல் ஆய்வாளர் ஒருவர் தன்னிடம் மூன்று லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளது, அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த லஞ்சப்புகார் குறித்து வேப்பேரி காவல் ஆய்வாளர் குணவர்மனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

இதையும் படிங்க: காட்டுப்பன்றி இறைச்சி சமைத்த 3 பேருக்கு அபராதம்

Intro:Body:*கிரிகெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைக்க 3 லட்சம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்*

*பிடிபட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்*

கடந்த ஆண்டு செப்டம்பரில் கரீபியன் லீக் 20 கிரிக்கெட் போட்டி வெஸ்டின்டிஸ்சில் நடைப்பெற்றது.

இது தொடர்பாக சென்னை சூளை பகுதியில் மேட்ச் பிக்சிங் ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்றது.

அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்ச ரூபாயை சூதாட்டத்தில் இழந்ததாக வேப்பேரி போலீசில் புகார் அளித்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் சூளை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுப்பட்ட சவுகார்பேட்டையை சேர்ந்த ராகுல் டி ஜெயின்(24),
தினேஷ் குமார் (29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப்கள், 53 லட்ச ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி ஜெய்ஷா என்பது தெரியவந்தது.

இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெய்ஷாவை 4 மாதங்களாக தேடிவந்த
நிலையில் நேற்று மயிலாப்பூரில் பதுங்கி இருந்த ஜெய்ஷாவை தனிப்படை போலீசார் செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

சம்பவதினத்தன்று போலீசார் நடத்திய சோதனையில் 93 லட்ச ரூபாய் கைபற்றபட்டதாகவும் அதில் சூதாட்டத்தில் 40 இலட்சத்தை இழந்த புகார்தார்ருக்கு அங்கேயே 40 லட்சத்தை ஆய்வாளர் குணவர்மன் திருப்பி கொடுத்து விட்டு மீதியுள்ள 53 லட்ச பணத்தை பறிமுதல் செய்ததாக காண்பித்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆய்வாளர் குணவர்மன் புகார்தார்ரிடம் இருந்து 7 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறபடுகிறது.

மேலும் வழக்கறிஞர் மூலம் தன்னை சந்தித்த ஆய்வாளர் குணவர்மன் தன்னை ஜாமீன் வாங்கி கொள்ளுமாறு கூறியதுடன் இதற்காக தனது வழக்கறிஞர் மூலம் 3 லட்ச ரூபாய் லஞ்ச பெற்று கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெங்களூர் தப்பி சென்ற நான் அங்கிருந்து நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தேன் ஆனால் ஜாமீன் நிராகரிக்கபட்டதால் மீண்டும் சென்னை வந்து சூளையில் உள்ள தனது வீட்டை காலி செய்துவிட்டு மைலாப்பூர் கடந்த 3மாதங்களாக வசித்து வருவதாக தெரிவித்தார்.

இதுவரை என்னை எந்த போலீசாரும் தேடிவரவில்லை என ஜெய்ஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருந்து ஹாட்டிஸ்கை ஆய்வாளர் குணவர்மன் எடுத்து கொண்டு வேறு ஹாட்டிஸ்க்கை அதில் பொருத்து விட்டதாக குற்றச்சாட்டியுள்ளார்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியிடம் 3 லட்சம் பணத்தை பெற்று கொண்டு அவரை தப்பி விட்ட ஆய்வாளர் செயல் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த லஞ்சபுகார் குறித்து வேப்பேரி ஆய்வாளர் குணவர்மணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.