ETV Bharat / city

'நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளித்திடுக' - ஆளுநரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்! - ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது நிலுவையிலுள்ள 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

CM Stalin
CM Stalin
author img

By

Published : Jun 2, 2022, 10:15 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று(ஜூன் 2) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022-க்கு ஒப்புதல் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022 உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடும்படி, ஆளுநரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச்சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என்று நாங்கள் பிரித்துப்பார்க்கவில்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.